search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு புறக்கணிப்பு"

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
    திருவெறும்பூர்:

    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிட வலியுறுத்தி திருச்சி  எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.   

    இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் திருச்சி கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்குகளில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதேபோல் முசிறி, லால்குடி, மணப்பாறை கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  #pollachiissue
    ஐகோர்ட்டு பற்றி விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணத்தில் வக்கீல் சங்க தலைவர் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. #HRaja #BJP
    கும்பகோணம்:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசார் , கூட்டம் நடத்த தடை விதித்ததால் எச்.ராஜா ஆவேசமடைந்து காவல்துறை மற்றும் ஐகோர்ட்டை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.

    அவரது ஆவேச பேச்சு இணைய தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து விமர்சித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. #HRaja #BJP
    ×